பொன்னுயிர் பொக்கிஷம்

கலாபத் தூரிகை விரல்கள் வருடியதால்
கரும் ரோம மலர்கள் மலர்ந்தன
என் பாறை மேனியின் மேல் - புல்லரிப்பு...
காந்தக் கருவிழிகள் கண்ணிமைத்ததால்
புவிகாந்தப்புலமாறி இரவும் பகலும்
கணப்பொழுதில் தோன்றி மறைந்தன - ஆச்சரியம்...
கற்பகக் கமலம் இவள் பூவிதழ் புன்னகை புரிந்ததால்
கற்பனை கடலும் என் கவலை அலைகளும்
வற்றியே தீர்ந்தன - அபூர்வம்...