இலக்கியப் பதுமை

அன்னை அன்பின்
இன்னொரு இறையுரு இவள்...

அகிலம் தழைக்க வலிகள் மறந்து கருவை சுமப்பவள் இவள்...

உறவால் கலந்து உற்ற பெற்றோர் பிரிந்து இன்னோர் இல்லம் செல்பவள் இவள்...

சுற்றம் சூழ சுமையென வாழும் வாழ்வில் உள்ளம் நாடி இல்லம் தேடி சுவையென வந்து மகிழ்வூட்டுபவள் இவள்...

தெவிட்டா தேனன்பும் திகட்டா தித்திப்பும் நாள்தோறும் தரமறவா தேவதை இவள்...

பரிணாமம் படைத்த பல்லுயிர் உலகில் பல்பரிமாணம் படைத்தவள் இவள்... (பெண்ணாக,அன்னையாக,மகளாக,தங்கையாக,மனைவியாக,தோழியாக,பாட்டியாக என பலவகை பரிமாணம்)

இம்மி இடரும் இடும்பைப் பிணியும்
இன்னல் இருளும் இனிதொரு இகழ்வும் இவள் வரவால் விலகும்...

இனிக்கும் இரவும் உறவின் மரபும்
இன்பம் கொடுக்கும் இமயம் இவளோ...

இவ்வுறவினை ஏந்த இவ்வையகம் ஏங்கும்...

இவ்வுறவினைப் பிரிய எவ்வுயிரும் நீங்கும்...

இறப்பொன்று நேர்ந்தாலும் மறுபிறப்பென்று பல வேண்டும் இவள் சுவாசத்தில் உயிர் வாழ...

இல்லாள் அல்லான் கல்லாய் செல்வான்...

எழுதியவர் : ச.சதீஷ்குமார் (4-Oct-17, 8:39 am)
Tanglish : ilakkiyap pathumai
பார்வை : 211

மேலே