அப்பா எனும் அப்பாவி

அன்பதனை அள்ளித்தருவதில்
அளவற்றிருப்பாய்!

அறிவூட்டும் ஆசானாய்
கண்டித்திருப்பாய்!

வேராய் நீ
மறைந்திருப்பாய்!

உயிராய் நீ
இருந்திருப்பாய்!

சிரிந்தால் சிந்தித்தால்
அழுதால் தவித்தால்
அனைத்திலும் நீயே
கலந்திருப்பாய்!

மகனாய் உமக்கு
கடனாற்றும் சமயம்
தகப்பனே எங்களைப்
பிரிந்தாய்! மறைந்தாய்!

நினைவாய்
நீ இருப்பாய்!
விதையாய் என்னுள்
புதைந்திருப்பாய்!

மகனாய் மகளாய்
பிறந்திருப்பாய்!
மறுபடியும் எங்களை
மகிழ்விப்பாய்!!

நித்தமும் உம்
நினைவில் இராம்...!

எழுதியவர் : இராம்குமார்.ப (17-Dec-19, 4:06 pm)
சேர்த்தது : இராம்குமார்
பார்வை : 124

மேலே