கை

கை..... அணைப்பதற்கு
காப்பதற்கு கருணைக்
காட்டுவதற்கு , அது
ஒரு போதும் அழிப்பதற்கல்ல
அழிப்பதற்கு மூர்க்கரை
எதிரியாய் வந்து தாக்குபவரை
கோயிலில் உறையும் மாலின்
சிலையைப்பார்.... அவருக்கு
கைகள் நான்கு.... இரண்டு
அபயம் காட்டி ரட்சிக்க
இரண்டு சக்கரமும் சங்கும் தாங்கி
தீயோரை அழிப்பதற்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Dec-19, 12:29 pm)
Tanglish : kai
பார்வை : 92

மேலே