கண்ணாடி
கண்ணாடி
சலிக்காத நிலவு, ரயில் ,யானை
குழுவில் சிறப்பாய் நிற்கிறது கண்ணாடியும்!
வளி இடையூறு செய்யா
நீர்ப்பரப்பே கண்ணாடியின்
முன்னோடியாய்...
ரசம் பூசப்பட்ட
கண்ணாடிகளின் வசம்
உள்ளது
ஏதோ ஓர்வசியப்படுத்தும்
காந்த சக்தி...
கடப்பது இமைக்கும் நொடியாயினும்
கண்களை
தன்பால் ஈர்த்து
தன்னுள் புதைக்கிறது
கண்ணாடி...
பிம்பம் மட்டுமா காட்டுகிறது
கண்ணாடிjQuery1710269308075885208_1575116608783
தான் அழகு என்ற கர்வத்தை
வளர்க்கிறது
அது சிலரிடம் ...
நான் யார் என்ற தத்துவ வேட்கையின்
வித்தை அது விதைக்கிறது
சிலரிடம்..
உள்ளதை உள்ளபடி காட்டும்
வெள்ளந்தியாய் இருப்பினும்
நிகழ்வுகளால்
நிலைதடுமாறும்
வேளைகளில்
அனைவருமே
பாடம் கற்கலாம்
கண்ணாடியிடம் . ..
சிதைந்த கண்ணாடித்
துண்டுகளும்
காட்டி நிற்கின்றன சிதையாத பிம்பங்கள்!