கொரோனா

ஓசையு மில்லை விழியு மில்லை
ஆனால் உயிர் உண்டு
பறப்பது மில்லை நடப்பது மில்லை
ஆனால் காற்றில் மிதப்பதுண்டு
பிறரைத்தொடு வதுமில்லை தீண்டுவது மில்லை
ஆனால் பிறர்தொடின் ஒட்டுவதுண்டு

வாய்மூக்கு கண்கள் அதன் நுழைவாயில்
முகத்திரையும் யிடைவெளியும் அது நுழையா வாயில்
செழித்த காற்றறை சிதைத்தே வளருது
பிணிதெளித்த திவலைநோய் யெண்ணிக்கை கூட்டுது

சீனதேசத்தில் பிறந்தது எண்திசையில் வளருது
பதிநாண்கு நாளாயுலது மின்னல்போல் பரவுவது
அணுவில் சிறியது விளைவில் கொடியது
மரபில் உருமாறுது மருந்தும் தடுமாறுது

மெல்லமெல்ல தொட்டு உறவாடுது
சின்னசின்ன மயிற்காலோடு உயிர்வாழுது
காணும் இடமெல்லாம் நிறைந்தோடுது
வண்ணவண்ண மனிதனுயிரில் பசியாறுது

கொரோனா மூன்றாம் உலகப்போ ரினாயுதம்
கொரோனா இரத்தம் சிந்தா யுத்தம்
கொரோனா பன்னாட்டு பொருளாதர மாயுதம்
கொரோனா நாளைய யுலகத்தின் தொடக்கம்

எழுதியவர் : ச. செந்தில் குமார் (2-Apr-20, 3:49 pm)
சேர்த்தது : ச செந்தில் குமார்
பார்வை : 638

மேலே