கொரோனா வைரஸ் ஏல அய்யா ஊட்டுல இரு எங்கயும் போவாத குரானா வந்துரு ம்ல

ஏல அய்யா! ஊட்டுல இரு! எங்கயும் போவாத!
குரானா வந்துரு ம்ல!
*************************************************************
கண்ணுல புலப்படாத
புள்ளி மாரி லா
இருந்துபுட்டு...
புரட்டி புரட்டி
எடுக்குதாம்ல!
ஊட்ட விட்டு
வெளிய போவாத ராசா!
சொல்லி புட்டேன்,
ஆத்தா! ஆமான்!

பூமிய ஆளுத
பயலுவலே எலாம்,
புரண்டு அடிச்சி ஓடி லா
ஒளியூரானுவ!
சொன்னா கேளு யா!
ஆத்தா சொல்லுதன்!

கடவுளு படைச்ச
ஒத்த செல்லு
உளி மாதி லா இருக்குது!
எல்லா பயலுவல
சில மாரி வெச்சி
செதுக் குத்தாம்ல...
ஆளயே காலி
பண்ணிரு தான்யா!

இதுக்கு
இருக்குற மதம்லாம்
மண்டைய பிச்சிகிட்டு
அலையுதானுவ!
இதுல
அவனுக அப்பாவி
மக்களுவ வேற
அவ அவன் கடவுளுகள
வேண்டுதானு வளாம்!

ஒடனே சரி பண்ண
வேண்டியதாம் ல!
யெல்லாம் காசு பாக்க!
யெம்மடி நானே
ரெண்டு தடவ நூறு
ஏமாந்திருக்கன்,
காச்ச நேரம்!
யெல்லாம்
திருட்டு பயலுவ!

நம்ம ஐயாறு
சொன்னாவ!!!
ப்ளேக் நோயி
இப்புடி தானவ...
ஆயிரம் வருசமா
கொத்து கொத்தா
கோடில கொன்னு
ஒழிச்சிச்சு!

கடவுளு ன்னு சொல்லி
சூடு தான போட்டானுவ!
இல்ல புனித தண்ணி
கொடுத்தானுவ!
அதுல நெறய
பயலுவ லுக்கு
தளும்பு தா மிச்சம்!
ஒன்னும் நடக்கலிய!!!

வெள்ள கார பய
ஒரு சிங்க குட்டி
தடுப்பு மருந்த
கண்டு பிடிச்சா ம்லா
அப்பிடியே ஊசி
போட்டானுவ!

அப்ரோம்....

அது என்னவாம்
பாக்குதெரியா வாம்ல
அதுக ஒழிஞ்சிச்சாம்!
அதயும் இந்த பயலுவ
கடவுளு கணக்குல
சேத்துட்டானுவ!
பாவம் அந்தாளு!
என்ன செய்வாரு!

யேன் சாதி, யேன் மதம்னு
சொல்லுத பயலுவலாம்
ஓடி ஒழிச்சி
கிட்டானுவ
எங்க போனானுவ
இப்பம் வர வேண்டியதான!

எப்படியோ ராசா
நம்ம குடி காக்க
வருவாம்ல ஒருத்தன்!
அதே மாரி சிங்ககுட்டி
இந்த எளவுக்கும் (குரானாவும்)
மருந்த கண்டு பிடிச்சி
சனியன விரட்டி ஒழிக்க
வருவாம்ல!!!

ஏய்யா! அதுவர
வெளிய போவாத!
ஆத்தா சொல்லுதன்!
ஓன் பெஞ்சாதி
சிறுக்கி மவ
பூ கூட வாங்க சொல்லுவா...
போயிரா தையா!

இப்ப ஒரு பய
பூ விக்க மாட்டா யா!
புத்தி மங்கி
ஊட்ட உட்டு
போயிராத ராசா!
ஒனக்கு பூ வச்சிருவாக!
ஊட்லயே இரு!
யெல்லாம் சரி ஆவட்டும்!
அப்புறமா போலாம்!
...
.....
........
சரி ஆத்தா போமாட்டேன்!
முந்தி ஊட்ல இருந்தா திட்டுவ
இப்ப வெளிய போனா வே திட்டுத!
போகல! போகல! போதுமா!
- ச.கி

எழுதியவர் : ச.கில்பர்ட் (ச.கி) (2-Apr-20, 2:36 am)
சேர்த்தது : ச கி
பார்வை : 91

மேலே