கொரோனா கவிதை

கடவுளை சந்திக்க
மனிதர்கள் சந்திக்கையில்
சந்தடி வாக்கில்
உடலின் ஒத்தையடி பாதையில்
உள்ளுக்குள் நுழைபவளே..!
தொண்டை குழிக்குள்
சண்டை இட்டு
நுரையீரல் உண்பவளே..!
உமிழ் நீர் உலகெங்கும்
உடல்வளர்த்து
தும்மலோடு துள்ளி - பிறர்
உடலோடு உறவாடுபவளே..!
உயிர் குடிக்க
உடலில் இடம் பிடிப்பவளே.!
உலகையே மூட சொல்லி
உத்தரவு இட்டவளே..!
தூசியின் தசை பிடித்து
காற்றின் கால் பிடித்து
நாசிக்குள் குதிப்பவளே.!
நாடு பூட்டியும்
ஓட்டம் எடுக்காமல் - உயிரெடுக்க
நோட்டம் இடுபவளே.!

சாமிகளை பூட்டி வைத்து
பூமியை பிணமாக்க வந்தவளே.!
உயிரச்சம் காட்டி
உள்ளுக்குள் அடைத்து
பேரச்சம் செய்பவளே.!
மூச்சுக்கு முத்தம் வைத்து
மூர்ச்சை ஆக்குபவளே.!
உலகடங்கி போன பின்னும்
உன் தொல்ல தாங்கலயே.!
குல தெய்வம் வேண்டியும்-உன்
கலகம் இன்னும் அடங்கலயே.!

உச்சி வெயிலு சூட்டுல
பூச்சி நீ இன்னுமா அழியல
பதினாலு நாளு வாழ்ந்தும் - நீ
பாரதப் போரு செய்யுற..?
ஒத்த நாளுல - உன்
மொத்த உசிரளிக்க
சித்தர் தணிகாசலம் மருந்திருந்தும்
வைத்தியத்த ஏனோ தடுக்குது
புரளி கத பேசி - தினம்
பீதியத்தான் கிளப்புது.!
அணு ஆயுதம் பல இருந்தும்
உன்னைத் தாக்க முடியல
நீ தரும் வலியெல்லாம்
தாங்கதானும் முடியல
சாதி மதத்து ஆட்சி
சங்கடத்தில் ஆச்சு
காவிமய பூச்சு
வைரஸ் மயமாச்சு
அதிகாரத் திமிரு அக்கிரமம்
சதி செய்யலாச்சு
ஆட்சியில தொற்றியுள்ள
பூச்சிகளும் ஒழியட்டும்
கொல்லும் கொரோனாக்களை
கொல்லும் காற்றே வீசட்டும்
வெல்லும் இந்தியா - இனியேனும்
நல்லரசு பாதையிலே
வல்லரசும் ஆகட்டும்

எழுதியவர் : செ.பா. சிவராசன் (1-Apr-20, 9:18 pm)
பார்வை : 166

மேலே