வேறொருகீதை
பார்க்கும் இடமெல்லாம் பார்க்கிறேன்
-----உன்மேனி நிறப்பச்சை
அப்பச்சை நிறஇலைகளூடே கேட்கிறேன்
----உன்புல்லாங்குழல் மெல்லிசை
ஆடும் இலைகளிலெல்லாம் காண்கிறேன்
---- உன்ஆலிலை மழலை
வெண்ணைபால் திருட்டுலீலை எல்லாம்
----பாகவதப்பக்திப் பரவசக்கதை
கேட்டுக்கொண்டிருந்தாலே போதுமடா கண்ணா
------வேறொருகீதை தேவையில்லை !