ஆவலில் ஓடிவந்தாள் காதலி ராதை
காதல் குழலிசைத்தான் கண்ணன் காட்டினில்
ஆவலில் ஓடிவந்து அருகமர்ந்தாள் ராதை
இசைக்க இசைக்க சோரவில்லை கைவிரல்கள்
இமைக்காமல் பார்த்திருந்தாள் காதலில் பாவை !
----இது சொல்லோசையுடன் வந்த இயல்பான வரிகள்
காதல் குழலிசைத்தான் கண்ணனெனும் மாயவன்
ஆவலில் ஓடிவந்தாள் காதலி ராதை
இசைக்க இசைக்க விரல்சோர வில்லை
இமைக்காமல் காதலில்பா வை !
----இது ப வி இன்னிசை வெண்பா

