சங்கெடுத்து முழங்கினான் போரை
குழலெடுத்து ஊதினான் கீதத்தை
காதலி ராதைக்காக
சங்கெடுத்து முழங்கினான் போரை
தோழன் பார்த்தனுக்காக
விரித்தெடுத்து ஓதினான் கீதையை
சோர்வுற்ற போர்வீரனுக்காகவும்
பாரில் பரிதவித்து நிற்கும்
பாவம் ஆன்மாக்கள் நமக்காகவும் !