கவிமாமணி சி வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு பத்துமொழி படித்தாலும் முத்தமிழை படி முதலில் கவிஞர் இரா இரவி
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு
பத்துமொழி படித்தாலும்
முத்தமிழை படி முதலில்! கவிஞர் இரா. இரவி.
******
எத்தனை மொழிகள் பயின்றாலும் தவறில்லை
எம் தமிழ் மொழியை முதலில் படித்திடு!
உலகின் முதல்மொழியான தமிழை
உடன் முதலில் படித்திடு அறிந்திடு!
கவியரசர் பாரதியார் சொன்ன மொழி
கற்ற மொழிகளில் சிறந்த மொழி தமிழே என்றார்!
பாவாணர் ஆய்வுகள் செய்து சொன்ன மொழி
பூமியில் தோன்றிய முதன்மொழி தமிழ்மொழி!
ஆங்கிலம் உள்பட அனைத்து மொழிகளிலும்
அன்னைத் தமிழ்மொழியின் சொற்கள் உள்ளன!
ஆதிமனிதன் ஓதிய முதல்மொழி தமிழ்
ஆதி அந்தம் தோன்றியபோதே தோன்றியது தமிழ் !
தமிழ்மொழியை கற்றுவிட்டால் போதும்
தரணியில் வாழ்வாங்கு வாழ்ந்திடலாம்!
தமிழில் இல்லாத இலக்கியம் வேறுமொழி இல்லை
தன்னிகரில்லா இலக்கியம் இலக்கணம் உள்ள மொழி !