கொரோனா

கொரோனா
உலகையே அச்சம் கொள்ள செய்யும்
ஓர் சர்வாதிகார சக்தி...
உனக்கு முன்பு இங்கு
ஏழை பணக்காரன் இல்லை!
அழகு அசிங்கம் என்ற பேதமும் இல்லை!
பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடு இல்லை!
ஏன் பலர் இன்று சாதி மதமும் பேசவில்லை...!!!
அனைவரின் ஆழ்மனத்தில் உள்ள ஒரே பயம்...???
உயிர் போய்விடுமா என்பதே....
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சமமே....
கொரோனா என்ற உயிர் கொள்ளி நோயின் முன்பு...
அனைவரும் சமமே என்றாலும் சந்தோசம் கொள்ள முடியவில்லை...
நீ பறிக்கும் எங்களது ஒவ்வொரு உயிரும் திரும்ப பெற முடியாத ஒன்று...
தாயை தன் கண் முன்னே உனக்கு இறையிட்ட பிஞ்சுகள் ஏராளம்....
எங்கோ ஓரிடத்தில் உயிர் பிரியும் செய்தி அறிந்தாலும் அனைவரின் மனதும் பதபதைக்கின்றது...
நீ எடுக்கும் உயிர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது...
இத்துனை உயிர்களை இறையாக்கியும் உனது உயிர்க்கொல்லி பசி அடங்கவில்லையே...
பிழைப்புக்காக பரதேசம் பூண்டவர்களோ
இன்று பிழைப்பும் இன்றி தன் தேசம் திரும்ப வழியுமின்றி நிற்கதியாய் நிறக்கின்றனர்...
தன் குடும்பத்தை தாங்க தன் ஒற்றை பிள்ளையையும் பிரதேசம் அனுப்பி
இன்று தாயகத்தில் தவித்திருக்கும் தாய்மார்கள் எத்துனையோ...
இயற்கை தாயே எங்களை மன்னித்து விடு உனக்கு மனிதர்களாகிய நாங்கள் செய்த பாவங்கள் ஏராளம்...
எங்களை மன்னித்து விடு...
இறையிட்ட உயிர்கள் போதும்
மீதமுள்ள உயிர்களையாவது காத்துக்கொள் இயற்கை தாயே....

எழுத்துரு எண்ணங்கள்
பா.மாதவன் மன்னார்குடி...

எழுதியவர் : பா.மாதவன் (6-May-20, 11:58 pm)
பார்வை : 206

மேலே