கொரோனா விழிப்புணர்வு

அணுவில் சிறியது
விளைவில் கொடியது
நுண்ணுயிரில் கொடியது
காற்றினில் விரவியது

மரபில் உருமாறுது
மருந்தும் தடுமாறுது
அரனும்  சிலையாகுது
மருத்துவனும் இறையாகுது

செழித்த காற்றறை
சிதைத்தே வளருது-பிணி
தெளித்த திவலைநோய்
யெண்ணிக்கை கூட்டுது

மெலிந்த காற்றின்பிடரியில்
மேதினியெங்கும் உலாவுது- மனிதர்களை
சிலிர்த்த மயிற்காலினால்
சிலந்திவலை போல்பின்னுது

உதிர்ந்த பூக்கள்போல்
மனிதசவம் கிடக்குது
விரிந்த சோலைபோல்
கல்லறைகள் சிரிக்குது

வறண்ட நதிபோல்
சாலைகள் கிடக்குது
பிறையில்லா வானம்போல்
பூமகள் தவிக்கிது

கொரோனா மூன்றாமுலக
யுத்தத்தின் முன்னோட்டமா - இல்லை
வல்லரசுகளின் கையில்
கிடைத்த பேராயுதமா!

நிகழ்கால கல்லறையின்
சுயசரிதையெழுதும் பேனாமுனையா-இல்லை
கடந்தகால தேடலின்
நாளைய புதையலா

அறிவியலின் விரல்பிடிப்போம்
அருகாமையை கடைபிடிப்போம்!
அறிவுடனே தமிழர்
தூய்மையை உயிர்பிப்போம்

ஓசையிலா யுத்தத்தில்
கொரோனாவை வென்றிடுவோம்!

My youtube channel
கவிதை மின்னலை
https://bit.ly/kavidhaiminnalai

எழுதியவர் : ச. செந்தில் குமார் (16-Apr-20, 5:00 pm)
சேர்த்தது : ச செந்தில் குமார்
பார்வை : 760

மேலே