புரட்சி செய்வோம் வா

புரட்சி ஒன்று செய்வோம் வா
மக்கள் மனதை மாற்றிட
மனதில் இருளினை நீக்கி
பாதை ஒன்றை உருவாக்கிட
சாதிவேரை கண்டறிந்து எரித்திட
மக்கள் மனதில் புயல் உருவாக்கி
தீய எண்ணங்களை ஒழித்திட
பெண்மையினை போற்றி அவா்கள்
அச்சமின்றி சமுதாயத்தில் வாழ்ந்திட
ஏழையென்றும் அடிமையென்றும்
ஒதுங்கி விடாமல் அச்சம்தவிா்த்து
கண்ணியமாக நோ் பட பேசியிட
எவரேனும் ஆள்க என்றிருந்திடாமல்
புரட்சி ஒன்று செய்வோம் வா…

எழுதியவர் : வினோ பாரதி (16-Apr-20, 5:00 pm)
சேர்த்தது : வினோ பாரதி
Tanglish : puratchi seivom vaa
பார்வை : 69

மேலே