வினோ பாரதி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வினோ பாரதி |
இடம் | : ஜெகதேவிபாளையம் |
பிறந்த தேதி | : 17-Feb-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Apr-2020 |
பார்த்தவர்கள் | : 131 |
புள்ளி | : 25 |
மண் வாசம் போல் தமிழ் என்னுள் நுகா்கிறது...
பருவ கனவுகள்
கண் விழிக்கும் போதே
கனவுகளும் விலகி போகுதே
தேடல் தொடங்கிய போதே
கற்பனை விரிய போகுதே
ஆசைகள் துளிர்விடும் போதே
துன்பமும் தழைக்க போகுதே
அன்பு மிகுதியாகும் போதே
பிரிவும் தொடங்க போகுதே
விதியென்று நினைக்கும் போதே
வாழ்வில் விளையாட போகுதே
மதியால் வெல்லும் போதே
மதியிழந்து வாழ்க்கை போகுதே....
தமிழ் மீது காதல்
தமிழ் கள்ளுண்டு
மடியிலே மயங்கினேன்
தமிழ் சொல்லெடுத்து
காதல் தூதுவிட்டேன்
தமிழினைப் பற்றியே
காமம் தணிந்தேன்
தமிழைக் கூவியே
தலை நிமர்ந்தேன்
தமிழ் அரவணைக்க
தனிமையெ னக்கேது.
கடலலைகள் கரைசேர்ந்தாலும் ஓய்வதில்லை !!
அதுபோல உன் நினைவலைகள் ஓய்வதில்லை !!
உன்னை தாங்கிய நெஞ்சத்தில் !!!
கனவுகள் காணும் இரவுகள் தான்
என் தோளில் உன்னை சேர்கிறது !!!
கரையும் மேகங்கள் தான் மண்ணிற்கு
அழகான உறவுகளை தருகிறது !!!
கரையும் நம் இதயங்கள் தான்
நம்மை பிரியாமல் சேர்கிறது !!!
ஆயிரம் தடயங்கள் மறைந்தாலும்,
நம் இணைந்த தடயங்கள் மறைவதில்லை!!!
பலநூறு
கண்ணீர்க்கு சமம்
உன்னுடைய
நூறாவது வெற்றி
“நானும் எந்தையும்”
நெருக்கமில்லாதவன்
நெருங்கிடமாட்டானா!!
ஏக்கத்தோடு தவித்தேன்..
உழைத்து…
உழைத்து…
சிவந்த கரங்கள்
என்னை
அரவணைக்கும் போது
என்னைவிட்டு செல்லாதே
என நான் கதறினேன்… …
உறவாடும் பொழுது
சிறிதெனினும்
களவாடி சென்றாய்
என் புன்னகையை…
நிலவை காட்டி
சோறு ஊட்டினாள்
அன்னை…
அன்று தெரியவில்லை
நிலவுதான் நீயென்று…
நான்
தவழும் போது
சுமந்து சென்றாய்… .
விழும் போது
தாங்கி நின்றாய்..
உன்
தியாகத்திற்கு ஈடு
என் புன்னகையென்று
நினைத்திருந்தாயோ!!!
உன்
சொல் கேட்காமல்
நான் செய்வதெல்லாம்
தவறென்றுணா்ந்தேன்..
உன்னை
மதியாமலிருந்த
காலங்களெல்லாம்
மதிகெட்டிருந்தேன்
எ
தினம் உதிரும்
பூவாக நீயிருந்தாலும்
நித்தமும் அதில்
உனைத் ...
தாங்கும் காம்பாக
நான்னாகவே
வண்ணங்ளாக
நீயிருக்க
தூரிகையாக
நான் மாறிட
ஓவியங்களும்
உயிர் பெற்று
வாழ்ந்திடுமே !...
ஓவியம் போல்
நீயிருக்க ....
அதில் ஒளிந்திருக்கும்
கருப்பொருளாக
நான் இருப்பேன்
மீனாக
நீயிருந்தால்
நீ .... நீந்தும்
நதியாக
நானாவேன்
காற்றாக
நீயிருந்தால்
உன்னில்
கலந்த
மின்அலை
நானாவேன்
முற்று பெறாத
புள்ளியாக
நீயிருந்தால்
உன்னிடத்தில்
அழியாத
கோலங்களாக
நான் மாற்றுவேன் .
🌼🙏🌼
கண் விழித்து பாா்த்தேன்
இரைச்சலான நகரம் -இப்போது
அமைதியான பூவனமானது…
வந்திருப்பது யாதென்றும் தெரியாது
நினைத்துக்கூட பார்க்காத – மாற்றத்தைக்
கொடுத்துவிட்டது… ..
மனந்தளா்ந்த இயற்கை
விழித்துக் கொண்டது – காற்றில்
மாசு குறைந்துவிட்டது…
இயற்கையே நாடிச் சென்றிடு
இயற்கையோடு ஒன்றிணைந்திடு
கொரோனாவை ஒழித்திடு. …