என்றும் உன்னிடத்தில்

தினம் உதிரும்
பூவாக நீயிருந்தாலும்
நித்தமும் அதில்
உனைத் ...
தாங்கும் காம்பாக
நான்னாகவே

வண்ணங்ளாக
நீயிருக்க
தூரிகையாக
நான் மாறிட
ஓவியங்களும்
உயிர் பெற்று
வாழ்ந்திடுமே !...

ஓவியம் போல்
நீயிருக்க ....
அதில் ஒளிந்திருக்கும்
கருப்பொருளாக
நான் இருப்பேன்

மீனாக
நீயிருந்தால்
நீ .... நீந்தும்
நதியாக
நானாவேன்

காற்றாக
நீயிருந்தால்
உன்னில்
கலந்த
மின்அலை
நானாவேன்

முற்று பெறாத
புள்ளியாக
நீயிருந்தால்
உன்னிடத்தில்
அழியாத
கோலங்களாக
நான் மாற்றுவேன் .

🌼🙏🌼

எழுதியவர் : Venu (11-Apr-20, 5:04 pm)
சேர்த்தது : Piyu
Tanglish : endrum unnidathil
பார்வை : 181

மேலே