நானும் எந்தையும்

“நானும் எந்தையும்”

நெருக்கமில்லாதவன்
நெருங்கிடமாட்டானா!!
ஏக்கத்தோடு தவித்தேன்..
உழைத்து…
உழைத்து…
சிவந்த கரங்கள்
என்னை
அரவணைக்கும் போது
என்னைவிட்டு செல்லாதே
என நான் கதறினேன்… …
உறவாடும் பொழுது
சிறிதெனினும்
களவாடி சென்றாய்
என் புன்னகையை…
நிலவை காட்டி
சோறு ஊட்டினாள்
அன்னை…
அன்று தெரியவில்லை
நிலவுதான் நீயென்று…
நான்
தவழும் போது
சுமந்து சென்றாய்… .
விழும் போது
தாங்கி நின்றாய்..
உன்
தியாகத்திற்கு ஈடு
என் புன்னகையென்று
நினைத்திருந்தாயோ!!!
உன்
சொல் கேட்காமல்
நான் செய்வதெல்லாம்
தவறென்றுணா்ந்தேன்..
உன்னை
மதியாமலிருந்த
காலங்களெல்லாம்
மதிகெட்டிருந்தேன்
என்றுணா்ந்தேன்…
இதையெல்லாம்
அறிவும் முன்
என் கண்ணீரை
கசிய விட்டு
சென்றாய்…
இன்று
உன் கல்லறையில்
ஏங்கி நிற்கிறேன்
உன் அன்பிற்காக..,..

எழுதியவர் : வினோ பாரதி (12-Jul-20, 7:59 am)
சேர்த்தது : வினோ பாரதி
Tanglish : naanum enthaayum
பார்வை : 170

மேலே