பருவ கனவுகள்

பருவ கனவுகள்

கண் விழிக்கும் போதே

கனவுகளும் விலகி போகுதே
தேடல் தொடங்கிய போதே
கற்பனை விரிய போகுதே

ஆசைகள் துளிர்விடும் போதே
துன்பமும் தழைக்க போகுதே
அன்பு மிகுதியாகும் போதே
பிரிவும் தொடங்க போகுதே

விதியென்று நினைக்கும் போதே
வாழ்வில் விளையாட போகுதே
மதியால் வெல்லும் போதே
மதியிழந்து வாழ்க்கை போகுதே....

எழுதியவர் : (1-Oct-24, 11:48 am)
சேர்த்தது : வினோ பாரதி
பார்வை : 23

புதிய படைப்புகள்

மேலே