மேதினக் கவிதை

மேற்கில் நிகழ்ந்த கறுப்புதினத்தில்
மேதினம் உதயமாகுது - அது
கிழக்கில் விரித்த
ஊதியரட்டிப்பில் கானலாகுது!

நீ
வியர்வை சிந்திய இடமெங்கும்
முத்துக்கள் போலமிளிருது - இரவில்
வியந்து பார்த்த நட்சத்திரங்கள்
பட்டுப்போயி நிற்குது...

வெய்யோன் பாயுமிடமெங்கும்
ஞாலம் பற்றியெறிகிறது - நின்
மெய்சேர்ந்த கனலலைகள்
மட்டும்கண்ணீர் சிந்துகிறது...

நீ
பத்துவிரல்களில் படைத்ததெல்லாம்
சிரித்தமுகமாகவே இருக்குது
பஞ்சனையில் தவழும் காகிதப்பூமட்டும்
முகசுழிப்புடனே பறக்குது...

பூவிரியும் சோலையிலே
காவிரிபோல் பாய்கிறான்
பூவுலகம்பசியாற பண்டங்களை
மலைபோல் குவிக்கிறான்...

நாற்றமில்லா மணம்கமழ
பூமியெங்கும் உழைக்கிறான்
நாற்றிசையில் பஞ்சம்போக்க
தேனிக்கள்போல பறக்கிறான்...

சுமைதூக்கும் பெண்ணொருத்தி
சுமைதாங்காது நடக்கிறாள்
இமைமூடாது உதிரம்சிந்தி
தன்குடும்பத்திற்காக உழைக்கிறாள்...

வண்ணம்சிந்தும் அந்திதொழிற்சாலையிலே
ஆடைகள் நெய்கிறான்
எண்ணமிளிரும் தென்றல்நுழையும்
கந்தல்துணியே அணிகிறான்...

ஒட்டிப் பிறந்த வயிரோடு
கட்டிப் புரளுது வறுமை - நான்
கொட்டிக் கிடத்திய பண்டங்களோ
எட்ட நின்றே விழிபசியாருது...

எண்ணத்தில் உயர்வுவைத்து
உழைப்பினில் நேர்மை கொண்டு - வாழ்க்கை
கிண்ணத்தில் நிரைந்தோடும்
தன்னம்பிக்கையே தொழிலாளர் வாழ்க்கை

எனது கவிதை யூடியூப் சேனல்
கவிதை மின்னலை

https://bit.ly/kavidhaiminnalai

எழுதியவர் : ச. செந்தில் குமார் (6-May-20, 9:33 am)
சேர்த்தது : ச செந்தில் குமார்
பார்வை : 88

மேலே