முலைகள்

முலைகள்
அமுதசுரபிகள்
பெண்மையின் புனிதங்கள்

தனக்கான ஆபத்து என்னவென்று
தெரிந்தும் அசட்டு
தைரியத்தில் தன்னை மறைத்துக்கொள்ளாமல்
உலாவரும் அழகியல் சின்னங்கள்

அதிக கவனத்தோடு
பயிரிட்டுப் பராமரிக்கப்படும்
பருவத்தின் வசந்தக்கால அடையாளம்

கண்ணோடு கண் பார்த்து
பேசமுடியாமல் மனதை
தடுமாறவைக்கும் சிற்ப்பங்கள்

சிவப்பை வெள்ளையாக்கி
சிசுவின் பசிப்போக்கும்
பிறப்பின் மகத்துவத்தை மறந்து
மிடுக்காகவே தன்னை காட்சிப்படுத்தும் மொட்டுக்கள்

முலைகள்
அமுதச்சுரபிகள்
பெண்மையின் புனிதங்கள்...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (5-May-20, 11:26 pm)
பார்வை : 3398

மேலே