வானவில்லை மீட்டுகிறாய்

சின்னசின்ன அடியெடுத்து
என்சிந்தைக்குள்ளே நடக்கிறாய்...
வண்ணவண்ண சிறகுவிரித்து
என்கவிதைக்குள்ளே பறக்கிறாய்...

மெல்லதீண்டும் தென்றல்போல
ஏதோசொல்லி சொல்லிகதைக்கிறாய்...
மெல்லதூறும் மழையைபோல
என்மேனியெங்கும் குழலிசைக்கிறாய்...

பாயும்நதி போலவந்து பாவை
விழியால் தாக்குகிறாய்...
சாயுமந்தி போல வானசாலையாக
மனதினில் தீட்டுகிறாய்...

எழில் கொஞ்சும் இடமெல்லாம்
பூமுகம் விரிக்கிறாய்...
பூமுகம் தொட்டால் இதழ்களாக பறக்கிறாய்...

மேகங்களை அள்ளிவந்து காற்று
மலைமீது வீசுவதுபோல் - உன்
மோகங்களால் வெள்ளைகாகிதங்களில்
கொட்டும் அருவியாக்குகிறாய்...

இரவின் கீற்றினை எடுத்து ஓர் வானவில்லை மீட்டுகிறாய்...
அவள் நினைவுகளில் ஓடும் நதியின் ஜதியைக் கொஞ்சம் கூட்டுகிறாய்...

சிலந்திவலை கூட்டினிலே சிறகுகளாய் வான்குடையில் மிதந்திடுவோம்...
வலசைபோகும் பறவைகளாய்
செவ்வாய்க்கு பறந்திடுவோம்...

எழுதியவர் : ச. செந்தில் குமார் (15-Aug-20, 6:15 pm)
சேர்த்தது : ச செந்தில் குமார்
பார்வை : 196

மேலே