பூவாய் உதிரும் தேன்மலர்க் கவிதைகள்

பூவிரிந்து மலர்ந்து உதிர்ந்த பூந்தோட்டத்தில்
பூமலர்ப் பாதம்பதித்து நீநடக்கும் போதினில்
பூவிதழ் விரித்து உதிர்த்த புன்னகையில்
பூவாய் உதிரும் தேன்மலர்க் கவிதைகள் !

பூவிரிந்து பூந்தோட்டம் எல்லாம் உதிர்ந்திட
பூமலர்ப் பாதம் பதித்துநீ யும்வந்தாய்
பூவிதழால் புன்னகை ஒன்றுநீ விட்டகல
பூவாய்பூந் தென்றலாய்நெஞ் சம் !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Aug-20, 10:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 36

மேலே