எவனோ ஒருவனாய்

எவனோ ஒருவனாய்...!
எங்கே என் தேடல்...?
ஏதோ ஒரு ஏக்கமாய்...!
எங்கே எனது கவிதை...?

ஒரு கணம் உன்னை
நினைத்து தவிக்கிறேன்...!
மறு கணம் உன்னை
மறக்க துடிக்கிறேன்...

ஒருபோதும் என்னிடம்
நெருங்கி வராதே...
எப்போதும் என்னை
விலகியும் போகாதே...!

போவதென்றால் போய்விடு!
அருகில் வராதே...!
வருவதென்றால் வந்துவிடு
தூரம் போகாதே...!

துடிக்கிறேன் துடிக்கிறேன்
நீயில்லா தனிமையில்...!
மறுமுறை மகிழ்கிறேன்
நீ வந்த இனிமையில்...

எனக்குள்ளே! ஏதோ ஒரு
கானம் கேட்கிறது...
என்னவென்று தெரியவில்லை
மனமுருகிப் போகிறது...!

மார்புக்கும் தொண்டைக்கும்
இடையில் ஒன்று!
விங்கவும் முடியாமல்-அதை
விழுங்கவும் முடியாமல் தவிக்கிறேன்...!

ஈரகுலையோ உள்ளே
அறுந்த ஒரு வேதனை!
அழுத்துகிறது என்னை!
தீயிட்டும் கொழுத்துகிறது...!

வலிகளை மறக்கவே
எத்தனையோபேர் ஏதேதோ
பாதையை தேர்தெடுக்க!
நானுன்னை கண்டெடுத்தேன்...!

என் தமிழே...!
என் தேடலை உன்னிடம்,
நான் தொடர்ந்து;
உன்னிடம் முக்தி பெறவா...?

என் சோகங்கள்
அத்தனையும் உனக்குள்!
புதைத்து போனேன்
என் செந்தமிழே...!

ஒருமுறை ஊற்றெடுத்தாய்!
உன்னிடமே பாய்கிறேன்;
உனக்குள்ளே மட்டுமே
என்னுயிரை மாய்க்கிறேன்...!

எதுவரை என் பயணமோ
அதுவரையும் என்னோடு வா...!
நானும் உன்னோடு வந்து
உயிர் வாழ்கிறேன்...!

முப்பொழுதும் கற்பனை கொடு...!
அது மட்டும் போதும்...
எவனுக்கும் அடங்காத நான்
உனக்குள் அடைந்து கிடப்பேன்...!

-Poonthotta Kavithaikaran

எழுதியவர் : பூந்தோட்ட கவிதைக்காரன் (15-Aug-20, 8:41 am)
Tanglish : evano oruvanaai
பார்வை : 303

மேலே