என் கண்ணின் பாவையன்றோ💕💕

எப்பொழுதாவது
கண்களைப் பார்த்தபடி
கண்சிமிட்டி நகைத்திடுவாய்..
உனக்குத் தெரியாது..!!
அந்த நொடிகளில் நான்
ஆகாயம் தொட்டிருப்பேன்..

கடித்த மீதமாய்
நீ தரும்...
எச்சில் பழங்களில் நான்
என்னுயிர் வாழ்ந்திருப்பேன்..

எப்பொழுதுமே
உனக்கானவனாக
இருக்க விரும்புவதே
எனக்கான காதல்.

முதலில் உன்னையும் - பிறகு
உன்னால் காதலையும்
காதலித்துக் கொண்டிருக்கிறேன்.
உனக்கும் சேர்த்து..

எதையும் உன்னிடம்
எதிர்பார்க்கவில்லை
என்று சொல்லி
ஏமாற்ற விரும்பவில்லை
வேறு எதுவும் தேவையில்லை
காதலை மட்டும் தா போதும்..

///---///---///
மருத கருப்பு.

எழுதியவர் : மருத கருப்பு (14-Aug-20, 11:00 pm)
சேர்த்தது : மருத கருப்பு
பார்வை : 183

மேலே