பூக்களின் ராணியே என் பேரழகி 555
***பூக்களின் ராணியே என் பேரழகி 555 ***
பேரழகி...
அனிச்ச மலரே நீதான்
மலர்களின் ராணியோ...
உன் அழகிற்கும்
மென்மைக்கும்...
ஈடு இணை வேறு பூக்கள்
இல்லையோ உலகில்...
உனக்கு தெரியுமா நடந்து
செல்லும் பூ ஒன்று...
என்னருகில் உண்டென்று...
எப்போதும் பனியில்
நனைந்ததுபோல்
அவளின் இதழ்கள்...
அவளின் இதழ்கள்...
மழையில் நனைந்த ரோஜா
இதழ்கள் போல் அவள் கன்னங்கள்...
அவள் நீராடி கூந்தலில்
சிக்கெடுத்தால் இட்லி பூ...
மல்லிகை மொட்டுபோல
அவளின் நாசிகள்...
சங்கு பூவை போல
அவளின் கழுத்து...
சூரியகாந்தி பூ போல
வரிசையான அவளின் பற்கள்...
அவரை பூ போல
அவளின்
அவளின்
காது மடல்கள்...
செங்காந்த மலரைப்போல
அவள் மேனியின் நிறம்...
கருப்பு வெள்ளை பூக்களை போல
புது மலராய் அவளின் கண்கள்...
உன் இதழ்களை போல அழகிய
அவளின் கைகால் விரல்கள்...
பிஞ்சுவிடும் பூசணி பூ
போல
அவளின் இடை...
அவளின் இடை...
பூத்து சிரிக்கும் தாமரையை
போல அவளின் பூ முகம்...
சாமந்தி பூ போல
அவளின் சமஞ்சமேனி...
இப்போது சொல்
பூக்களின் ராணி...
என்னருகில் இருக்கும்
என்னவள்தானே.....