உத்தமி

உச்சி மோர்ந்தாள்!
சினுங்கல் ரசித்தாள்!
அந்தரங்க அமிர்தம் தந்தாள்!
வலியில் சுகம் கண்டாள்!
வாரி அணைத்துக் கொண்டாள்!
முந்தானை பாய் விரித்தாள்!
என் வாசம் பூசிக்கொண்டாள்!
இரவுகளின் தொல்லை பொறுத்தாள்!
ஈரத்தில் மேனி குளித்தாள்!
முத்தத்தில் நனைய வைத்தாள்!
மொத்தத்தில் நினைவாலே உருகிப் போனாள்!
உதிரத்தால் உயிரேற்றிய உத்தமி தாய்...

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (5-Mar-19, 11:41 am)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : uttami
பார்வை : 64

மேலே