தேடல்

தொடக்கத்தில் பிறப்பு தேடல்!
பிறந்த பின்னே இறப்பு தேடல்!
வறுமைக்குப் பணம் தேடல்!
பணத்திற்கு நிம்மதி தேடல்!
ஏமாந்த மனதிற்குத் தனிமை தேடல்!
ஏகாந்த தனிமைக்கு
உறவுகள் தேடல்!
வாலிப வயதில் காதல் தேடல்!
காதல் வந்ததும் காமம் தேடல்!
அண்ட தொடக்கமே அறிவின் தேடல்!
அதனின் அந்தமே ஆன்மீகத் தேடல்!
பசிக்கும் உடலின் உணவு தேடல்!
பணம் பெருத்த பின் பசியே தேடல்!
வாழ்வில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேடல்!
வாழும் வாழ்க்கையே ஒருவகை தேடல்!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (25-May-19, 3:59 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : thedal
பார்வை : 3207

மேலே