வருங்கால இந்தியன்

வருங்கால இந்தியன்.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

இந்தியா வளந்துவிட்டது
இந்தியா ஒளிர்ந்துவிட்டது
இந்திய தன்னிறைவு அடைந்துவிட்டது
விரைவில் வல்லரசு ஆகிவிடும்.

கூவம் ஓரம் குடிசை என் மாளிகை
கூவத்தில் இருந்து வரும் துர்நாற்றம்
பழகிவிட்டதால் அது எனக்கு நறுமனம்
நிரந்திர கழிப்பறை இல்லை
கதவு இல்லாத குளிப்பறை
நல்ல வெய்யிலில் அவரை பந்தல்
நல்ல மழையில்
கூரை வானமாகிவிடும்
இதுவே என் வீடு.

ஒரு வேளை சாப்பாடு
அதுவும் சில சமயம் கிடைக்காது
ஒட்டிய வயிறு
ஒல்லியான தேகம்
ஏக்கம் நிறைந்த பார்வை
இதுவே என் வாழ்க்கை.

அப்துல்கலாம் என் ஹீரோ
அம்பேத்கர் என் குரு
என் தமிழ் ஐய்யா என் வழிகாட்டி
என் தாய் எனக்கு தெய்வம்.

காலையில் பேப்பர் போடும் பையன் நான்
கூலிக்கு பூ கட்டும் என் அம்மா
மீண்பாடி வண்டி ஓட்டும் என் அப்பா
களைப்பு தீர தினம் குடிப்பார்
போதை தலைக்கேறியது என்றால் என் ஆசை தீர அம்மாவை அடிப்பார்
தட்டி கேட்க பயம்
அடி வாங்கிய அம்மா அழுவாள்
அதை பார்த்து நானும் அழுவேன்
இருந்த ஒரே அரசு தந்த டீவியும் பழுதாகி விட
அம்மா மாலை நேரத்தை வீணாக்காமல் வயர் கூடை பின்னுவாள்.

அப்பா குடித்துக்குடித்து
உடலை கெடுத்துக்கொண்டார்
ஓய்வில்லா வேலையால் அம்மா உரு குளைந்து விட்டாள்.

பண்ணிரண்டாம் படிக்கும் நான்
டாக்டர் படிக்க ஆசை
நிச்சயம் அதிக மதிபெண் வாங்கி விடுவேன்
அடித்து கூறுவேன் அதில் ஒன்றும் தயக்கம் இல்லை
ஆனால் நீட்
தேர்ச்சி பெற வேண்டுமே
குருவியன சேர்ந்து வைத்து காசில்
நீட் கேள்வி பதில் மாதிரி புத்தகம் வாங்கி விட்டேன்
அந்த அண்ணல் அம்பேத்கர் அருளால் நிச்சயம் வெல்வேன் நீட் தேர்வில்
மருத்துவம் படிப்பேன்
டாக்டர் ஆவேன்
அம்மாவை ராணி போல் பார்த்து கொள்வேன்
அப்பாவை திருத்த முயலுவேன்
பெற்றோர்யை சிரம் மேல் வைத்து
என் கண் போல் காப்பேன்.
- பாலு.

எழுதியவர் : பாலு (25-May-19, 5:26 pm)
சேர்த்தது : balu
Tanglish : varungaala inthiyan
பார்வை : 84

மேலே