தமிழ்த் தாகம்

தமிழ்த்தாகம்

மழலை மொழியில் தமிழைத் தேடினேன்!
மம்மி என்று மனதை உடைத்தது!
பள்ளிக்கூடத்தில் தமிழைத் தேடினேன்!
ஆங்கிலம் வந்து ஆக்கிரமித்தது!
வேலை தேட நான் தமிழைத் தேடினேன்!
இந்தி வந்து என் வேலை பறித்தது!
உடுத்தும் உடையிலே தமிழைத் தேடினேன்!
மேற்கு கலாச்சாரம் மேனி துறந்தது!
இறுதி சடங்கிலாவது தமிழைத் தேடினேன்!
எலக்ட்ரிக் சுடுகாடு அதையும் எரித்தது!
ஆழி கொண்டது கொஞ்சம்!
ஆரியம் கொன்றது கொஞ்சம்!
தீயில் வெந்தது கொஞ்சம்!
திராவிடம் தின்றது கொஞ்சம்!
எல்லாம் எடுத்தது போக
ஏட்டு வடிவம் தான் மிச்சம்!
கடலாய்த் தாகம் தமிழில் தேட,
இன்று
கானல் நீராய் எங்கோ தமிழ்!
தமிழைத் தேடி நா வறண்டு தவிக்கிறேன்;
கானல் நீரும் தான் தாகம் தணிக்குமா?

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (22-Sep-19, 2:10 am)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : thamizhth thaagam
பார்வை : 1635

மேலே