காதல் தயக்கம்

என் காதல் கடவுச்சொல் ஆனவளே;
என் மனதைப் பதிவிறக்கம் செய்வாயா!
உன் வரம்புக் கோட்டிலே தயங்குகிறேன்;
உன் செய்கை அம்பினை எய்வாயா!

மையல் எப்படி பூத்தது,
மனதில் என்று தான் தெரியவில்லை!
அன்பை உன்னிடம் சேர்க்கும்
மார்க்கம் எனக்கும் புரியவில்லை!

காதல் கடலிலும் வேலிகள் உண்டா?
அந்த வேலியில் சிக்கினேன்!
சிக்கி தயங்கி நான் ஒதுங்கி நிற்கிறேன்!
சொல்ல வந்ததை விழுங்கினேன்!

ஏதோ ஒன்று தைரியம் தர,
மாதே உன்னிடம் காதல் சொன்னேன்!
காதில் அலைபேசி சிணுங்கி உணர்த்தியது!
காதல் சொன்னது கனவில் என்று...

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (22-Sep-19, 2:04 am)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : kaadhal thayakkam
பார்வை : 376

மேலே