ஒரு பெண்ணின் ஏக்கம்
பல்லவி:
உன்னாலே
உள்ளே வெட்கம் வந்து நிறையுது
தன்னாலே
மனம் தட்டு கெட்டு திரியுது
என்னுள்ளே
பல பூமி வந்து சுழலுது
என் தேசம்
அட உந்தன் வாசம் நிறையுது
நெடுந்தூரமா நெடுந்தூரமா
கைகோர்த்து நடை போட வா
தொலை தூரமா தொலை தூரமா
ஏக்கங்கள் வெளியேறுமா
காதல் காதல்
நானும் உணர்ந்தேன்
காணும் யாவும்
உன்னை அறிந்தேன்
போகும் பாதை
நானும் மறந்தேன்
உன் வீட்டை அடைந்தேன்.
காதல் காமம்
நானும் தவித்தேன்
நாளும் பொழுதும்
உன்னை நினைத்தேன்
இரவும் பகலும்
விழித்து கிடந்தேன்
என் தேகம் மெலிந்தேன்
(உன்னாலே)
சரணம்1:
நெஞ்சு கூட்டிலே
நித்தம் பள்ளி கொள்கிறாய் ஏண்டா . . .
உதிரமாகவே
நாடி நரம்பில் கலக்கிறாய் நீயடா . . .
உன்னை வந்து சேரவே
உயிரோடு இருக்கிறேன்
பிரியாத
நிழலாக
நீ வாடா.
காணும் ஆவல்
நானும் தவித்தேன்
காணும் வரையில்
தூக்கம் தொலைத்தேன்
சேரும் நொடியில்
என்னை இழந்தேன்
வெட்கத்தை உடைத்தேன்
தீண்டும் நேரம்
ஜீவன் களித்தேன்
தீண்ட தீண்ட
நாணம் தொலைத்தேன்
நானும் நீயும்
சேரும் நொடியில்
வியர்வையில் குளித்தேன்
(உன்னாலே)
சரணம்2:
வாழ்க்கை ஏட்டிலே
நான் எழுதும் கவிதையே நீதான்
உயிரின் கூட்டிலே
அடைகாக்கும் பறவையாய் நான் தான்
இந்த ஜென்மம் போதுமா?
கோடி ஜென்மம் வேண்டுமே.
கொல்லாமல்
சாகின்றேன்
உன்னாலே
உன்னை உன்னை
சேர துடித்தேன்
உன்னில் என்னை
புதைத்து சிரித்தேன்
மீண்டும் மீண்டும்
புதைந்து ரசித்தேன்
உன்னுள்ளே ஒளிந்தேன்
என்னை என்னை
தேடி அலைய
வசிய பார்வை
நானும் பொழிய
நீயும் வந்தாய்
நானும் நிறைய
நிறைந்தேனே உன்னால்
(உன்னாலே)
ந.சத்யா