காசு செய்யும் பவுசு
காலமோ கலிகாலம்
காசு போடவைக்குது எல்லாரையும் தாளம்
திறமைக்கில்லை இங்கு மவுசு ...
காசு செய்யுது பவுசு...
குணமோ குன்றிப்போகுது...
பணமோ மதிப்பாகுது...
கனவுகளும் கண்ணீரில் மூழ்குது...
உள்ளமோ குமுறுது...
துணிச்சலும் துவண்டுபோகுது...
இறுதியில் ஏமாற்றமே மிஞ்சுது...
தகரமும் தங்கமாகுது...
அலங்கோலமும் அழகாகுது...
காற்று புகாத இடத்திலும்
காசு புகுந்து செல்லுது...
ஏன் கடவுள் சந்நிதியில் கூட
காசு தான் பேசுது...
விளங்காத என் புத்திக்கும்
இப்ப தான் புரியுது...
ஒன்றா இரண்டா சொல்ல
வேதனை வந்து முட்டித்தள்ளுது...
என்று மாறும் என் சமூகம்???