புனிதா சரவணன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : புனிதா சரவணன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 07-Aug-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Jun-2021 |
பார்த்தவர்கள் | : 237 |
புள்ளி | : 11 |
காலமோ கலிகாலம்
காசு போடவைக்குது எல்லாரையும் தாளம்
திறமைக்கில்லை இங்கு மவுசு ...
காசு செய்யுது பவுசு...
குணமோ குன்றிப்போகுது...
பணமோ மதிப்பாகுது...
கனவுகளும் கண்ணீரில் மூழ்குது...
உள்ளமோ குமுறுது...
துணிச்சலும் துவண்டுபோகுது...
இறுதியில் ஏமாற்றமே மிஞ்சுது...
தகரமும் தங்கமாகுது...
அலங்கோலமும் அழகாகுது...
காற்று புகாத இடத்திலும்
காசு புகுந்து செல்லுது...
ஏன் கடவுள் சந்நிதியில் கூட
காசு தான் பேசுது...
விளங்காத என் புத்திக்கும்
இப்ப தான் புரியுது...
ஒன்றா இரண்டா சொல்ல
வேதனை வந்து முட்டித்தள்ளுது...
என்று மாறும் என் சமூகம்???
பூவின் தேனே...
கண்ணின் மணியே...❤❤
ஈன்றவர்களின் பாசம் எனைச் சோதிக்க...
உள்ளே ரசித்து வெளியே வெறுத்தேனே...
புரியாத புதிராய்
உன் முன்னால் நின்றேனே...
பூக்களைப் போல் நம் காதல் உதிர 💔
தொலைவிலே நீயும்...
தனிமையிலே நானும்...
தவிக்கிறேனே...
உன் நினைவுகளால் தேய்கிறேனே...
எனக்கானவனே...
மன்னிப்பாயா...😔😔
உன் மாயக்கண்ணால் என்னுள்
மையம் கொண்டாய்...
உன் பார்வைப்பட்டவுடன் நானும்
சருகாய்த் தான் போகிறேனே...
விண்ணில் தான் பறக்கிறேனே...
கம்பனாய் மாறிக்
கவிதைகள் தீட்டுகிறேனே...
என்னுள்...
அலையென ஆர்ப்பரிக்கின்றாய்...
கருமேகங்களாய்ச் சூழ்ந்துள்ளாய்...
உன் நினைவுகள் இடைவிடாது பொழிந்து என் தூக்கத்தைத் துரத்திவட்டு
ஆசையைத் தூவிச் செல்கின்றது...
என் கண்மணியே...
ஆதாமும் ஏவாலுமாய்
அன்பின் ஆழம்வரைச் செல்ல ...
என் துணையாகிட ...
வருவாயா...

என் அன்பே❤❤
உன் கடைக்கண் பார்வையிலே
என்னைக் கரையவைத்தாய்...
விட்டுத் தள்ளிப்போகாதே...
ஆசை தான் அலைமோதுதே...
மனம் தான் ஏங்கித் துடிக்கிதே...
அருகில் தான் வாராயோ...
ஒரு புன்னகை இட்டுச் செல்வாயோ🥰🥰
இந்த நொடி தான் நீளாதோ???
காண்பது கனவோ அல்லது நிஜமோ???
இது யார் செய்த பிழையோ???
இறைவன் தந்த வரமே...
ஈரைந்து மாதம் என்னுள் வசித்து டிசம்பர் மலராய்ப் பூத்தவனே...
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்னும் வாக்கினை மெய்ப்பித்தவனே...
நான் ஏங்கிய உறவினை என் மகளுக்கு அளித்தவனே...
என் தந்தையின் சாயல் தட்டியவனே...
வாழ்க்கை என்னும் ஓட்டத்தில் சுறுசுறுப்புடன் ஓடச்செய்து என்னை நாள்தோறும் செதுக்கும் சிற்பியே...
இன்றுடன் நீ என்னை முழுமையடையச் செய்து பத்து வருடங்கள் ஆகிறது...
நேற்று தான் உன்னைத் தொட்டிலிட்டுத் தாலாட்டியது போலொரு நினைவு...
இன்றோ என் தோள்வரை வளர்ந்து நிற்கிறாய்...
என்ற