அன்பு மகனுக்கு ஒரு வாழ்த்து
இறைவன் தந்த வரமே...
ஈரைந்து மாதம் என்னுள் வசித்து டிசம்பர் மலராய்ப் பூத்தவனே...
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்னும் வாக்கினை மெய்ப்பித்தவனே...
நான் ஏங்கிய உறவினை என் மகளுக்கு அளித்தவனே...
என் தந்தையின் சாயல் தட்டியவனே...
வாழ்க்கை என்னும் ஓட்டத்தில் சுறுசுறுப்புடன் ஓடச்செய்து என்னை நாள்தோறும் செதுக்கும் சிற்பியே...
இன்றுடன் நீ என்னை முழுமையடையச் செய்து பத்து வருடங்கள் ஆகிறது...
நேற்று தான் உன்னைத் தொட்டிலிட்டுத் தாலாட்டியது போலொரு நினைவு...
இன்றோ என் தோள்வரை வளர்ந்து நிற்கிறாய்...
என்றும் பண்புடனும் பாசத்துடனும் இருக்க என் அன்பு மகனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...