நீ தோழியா காதலியா

நீ தோழியா காதலியா ???

இது இரவா பகலா ?
புரியாத தவிப்பில்
புரியாமல் அலையும்
புரியாத புதிராய் நான்

இது நிஜமா கற்பனையா ?
தெரியாத தவிப்பில்
தெரியாமல் அலையும்
தெரியாத வழியாய் நான்

நீ மானுடமா தேவதையா ?
அறியாத தவிப்பில்
அறியாமல் அலையும்
அறியாத வினாவாய் நான்

நீ தோழியா காதலியா ?
உணராத தவிப்பில்
உணராமல் அலையும்
உணராத உறவாய் நான்

நீ அழகா அற்புதமா ?
வியப்போடு அலையும்
வியப்பான தவிப்பில்
வியப்பான இயக்கமாய் நான்

இது தேடலா தொலைதலா ?
தேடாமல் தொலையும்
தொலையாமல் தேடும்
தேடலின் தொலைதலாய் நான்

நீ விடையா பிழையா ?
வினாவோடு அலையும்
விடையான பிழையில்
பிழையான வினாவாய் நான்

நீ வறுமையா வசந்தமா ?
வறுமையான நிலையில்
வசந்தமான உறவில்
வறுமையான வசந்தமாய் நான்


நீ முடிவா தொடக்கமா ?
தொடக்கமான முடிவில்
முடிவான தொடக்கத்தில்
தொடக்கத்தின் முடிவாய் நான்நீ சுகமா சுமையா ?
சுமையான சுகத்தோடு
சுகமான சுமையோடு
சுமையான சுகமாய் நான்

நீ சேர்தலா பிரிதலா ?
பிரிதலான சேர்தலோடும்
சேர்தலான பிரிதலோடும்
பிரியாத சேர்தலாய் நான்இறுதியாய்
நீ நீயா நானா ?
நீயென்ற நானும்
நானென்ற நீயும்
நீ நான் நாம் என்ற
நிலையான நம்பிக்கையில்
நீயும் நானும்

எழுதியவர் : ந.சத்யா (17-Jul-19, 9:56 am)
பார்வை : 306

மேலே