களவாடும் பூனைப் போலே
அடுக்கி வைத்தப் பானையிலே
ஊற்றி வைத்தப் பாலைப்போலே
உள்ளதடி உந்தன் உருவம்
உருவத்தில் எனை மறந்து
உற்சாகத்தால் உயரே பறந்து
உன்னைத் தோன்றுதடி களவாடவே
களவாடும் பூனைப் போலே
அடிமேல அடியை வைத்து
அள்ளத் துடிக்குதடி என் மனதும்
மனதில் மாளிகை வைத்து
மன்மதனை காவலுக்கு வைத்து
மணிக்குயிலே மணந்துக் கொள்ள வேணுமடி
வேண்டியதை வெற்றிக் கொள்ளவே
வேல் விழியாளைப் பற்றிக் கொள்ளவே
விரதத்தில் உள்ளேன் விருமாண்டியாய்.
------ நன்னாடன்.