வரம் தருவாயோ

"மழை நாளில் வீசும்

மண்வாசம் வேண்டும்""மாமரத்தின்

மணம் நிறைந்த

மாசற்ற காற்று வேண்டும்""காதில் கடலோசை

கேட்க வேண்டும்""ஆலமரத்தில் ஆடிய

ஊஞ்சல் அது வேண்டும்""பௌர்ணமி நிலவின்

பொலிவு வேண்டும்""அமாவாசை இரவில்

அமைதியான இசை வேண்டும்""மண்சட்டியில் வைத்த

மீன் குழம்பு வேண்டும்""நெற்கதிரின் வாசம் நிறைந்த

வயல்வெளி அதில்

வண்ணத்து பூச்சி பிடிக்க வேண்டும்""மாட்டு வண்டியின்

சலங்கை சத்தம் கேட்க

சாலையில் செல்ல வேண்டும்""மழையில் நனைந்திட

வீட்டின் நடுவில்

முற்றம் வேண்டும்""சொந்தங்கள் உடன் அமர்ந்து

சோறு உண்ணும்

சொர்க்கம் வேண்டும்""குழந்தை மனம் வேண்டும்

குறையற்ற குணம் வேண்டும்""தன்னம்பிக்கை இழக்கும் போது

தந்தையின் மடி வேண்டும்

மகிழ்ச்சியின் போது

அன்னையின் அன்பு முத்தம் வேண்டும்""இவையெல்லாம் இல்லாவிடினும்

என் இனிய மனம் கவர்ந்தவனே

உன்னுடன் காலம் முழுக்க

கழித்திடும் வரம் மட்டும் வேண்டும்""வரம் தருவாயோ என் வான்மழையானவனே

உன் வாழ்க்கை துணையாகும் வரம் தருவாயோ"

எழுதியவர் : கனி (17-Jul-19, 11:41 am)
Tanglish : varam tharuvaayo
பார்வை : 451

மேலே