பிரபாகரன் எனும் பேராற்றல்

நீ இல்லாமல் இருந்தாலும்
இருப்பதாய் உணர்கிறோம்
அதனால் தான் இன்னும்
தமிழனாக இருக்கிறோம்

இங்கே தமிழ் கடவுள்
முருகன் என்றால்
அங்கே ஈழத்தமிழின்
கடவுள் பெயர் பிரபாகரன்

மனிதனுக்கு தான்
மரணம் எல்லாம்
மாவீரன் நீ
உன்னிடம் எதிர்த்து நிற்க
மரணத்திற்கும் வக்கில்லை
அதனால்தான் நீ
இறந்ததற்கான
ஆதாரமும் இதுவரை இல்லை

அங்கே எம் தொப்புள் கொடிகள்
தோட்டாக்களால் சிதைக்க பட்ட போதும்
எம் தூரத்து சகோதரிகளும்
அம்மாக்களும்
நிர்வாணமாக்கபட்டு கொல்ல பட்ட போதும்

அதையும் வைத்து
அரசியல் ஆதாயம் தேடிய
அரசியல் வாதிகளையும்
சாவகாசமாய் சேனலை மாற்றி
கிரிக்கெட் பார்த்தவர்களையும்
கழித்து விட்டால்
மீதமுள்ள அனைவருக்கும்
நீயே ஆனாய் தலைவனாய்

என்று ஒருவனை பற்றி
நினைக்கும்
கடைசி மனிதன்
இறக்கிறானோ
அன்றுதான் அவனுக்கு
உண்மையான மரணம்
என்று வேதங்கள் கூறுகின்றன
அப்படியானால்
உலகத்தின் கடைசி தமிழன்
இறந்த பின்பும் கூட
நீ வாழ்ந்து கொண்டே இருப்பாய்

ஆம் நீ கூடு விட்டு கூடு மாறி
வேறு உருவில் வந்து விடுவாயோ
என்ற பயம்
நம் எதிரிகளின்
ஏழு தலைமுறைக்கும் இருக்கும்
அந்த பயத்திலும் நீ
வாழ்ந்து கொண்டு தான் இருப்பாய்

அதுதான்
அந்த பயத்தை உருவாக்கும்
தலைவனின் பெயர் தான்
பிரபாகரன்
கடைசி தமிழனுக்குமான
மாபெறும் தலைவன்.

வீர வணக்கங்களுடன்

ந.சத்யா

எழுதியவர் : ந.சத்யா (26-Nov-21, 11:13 am)
சேர்த்தது : சத்யா
பார்வை : 63

மேலே