கலவைக்கீரை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வாதபித்த ஐயத்தை மாற்றும் மலமறுக்கும்
ஓதுகுடல் வாதமதை ஒட்டுங்காண் - போதின்
பலகலவைக் கோதாய்நற் பத்தியத்திற் கொவ்வும்
பலகலவைக் கீரையுண்டு பார்

- பதார்த்த குண சிந்தாமணி

பலவகையும் கலந்த கீரை வாத பித்த, கபதோடங்களையும், மலச் சிக்கலையும், குடல் வாதத்தையும் போக்கும்; பத்தியத்திற்குப் பயன்படும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Nov-21, 7:48 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே