சிறுகீரை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கண்புகைச்சல் நேத்திரநோய் காசம் படல(ம்)ரசப்
புண்கிரிச்ச ரஞ்சோபை பொங்குபித்தம் - மண்பரவு
தாவரவி ஷங்களும்போம் தாழாத் திருவுமுண்டாம்
கூவுசிறு கீரைதனைக் கொள்
- பதார்த்த குண சிந்தாமணி
கண்புகைச்சல், கண்ணோய்களான காசம், படலம், இரசப்புக்கண், கிரீச்சரம், சோபை, பித்தம், தாவர விடங்கள் போன்றவற்றைப் போக்கி சிறுகீரை அழகையுண்டாக்கும்