விஷத்தைப் போக்கும் மருந்துகள் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பேய்ச்சுரை பேய்க்கொமட்டி பேய்ப்பீர்க் கொடுதுமட்டி
பேய்ப்புடலை புங்கழிஞ்சில் பேர்அவுரி - வாய்த்தமலை
வேம்புசிவ னார்வேம்பு வெள்எருக்கு வெள்அறுகு
சோம்புவிஷம் போக்குமெனச் சொல்

- பதார்த்த குண சிந்தாமணி

பேய்ச்சுரை, பேய்க்கும்மட்டி, பேய்ப்பீர்க்கு, தும்மட்டி, பேய்ப்புடல், புங்கு, அழிஞ்சில், காட்டவுரி, மலை வேம்பு, சிவனார் வேம்பு, வெள்ளெருக்கு, வெள்ளறுகு, சோம்பு இவை விடத்தின் வேகத்தைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Nov-21, 3:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே