பித்தசம திரவியம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மொச்சை கடலைபெரு முற்கமுளுந் தேல(ம்)வெந்தி
மெச்சு மிளகுசுண்டை வெண்ணெயிஞ்சி - பச்சைநிறங்
காட்டுமப்பைக் கோவை கருநிம்பம் சீரகங்கள்
கூட்டுகறி பித்தசமம் கூறு

- பதார்த்த குண சிந்தாமணி

வெள்ளை மொச்சைக் கொட்டை, கடலை, பெருங்காராமணி, உளுந்து, ஏலம், வெந்தயம், மிளகு, சுண்டைக்காய், வெண்ணெய், இஞ்சி, அப்பைக் கோவைக்காய், கருவேப்பிலை, சீரகம் முதலியன சேர்ந்த காய்கள் பித்தத்தை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Nov-21, 3:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே