பூனைக்காலி வித்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தழுதளைநாற் றத்தோடு சார்இரத்தப் போக்கும்
பழுதுபுரி கின்றகரப் பானும் - அழுதேகுந்
தாலமிசை விந்துவுமாஞ் சாற்றற் கரும்பூனைக்
காலி விதையைக் கழறு

- பதார்த்த குண சிந்தாமணி

கருமைநிற பூனைக்காலி வித்து கற்றாழை நாற்றம், இரத்தகிராணி, கரப்பான் இவற்றை நீக்கும்;. தாது விருத்தி உண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Nov-21, 9:14 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே