உகா வித்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வாதமுதல் முப்பிணியால் வந்த பிணியையெலாங்
கோதிற் சமனமிகக் கொண்டொழிக்குஞ் - சீத
மகாவனசந் தன்னில் வளர்ந்திருக்கு மாதே
உகாவிதையை நன்றா யுரை
- பதார்த்த குண சிந்தாமணி
திரிதோடங்களால் வந்த நோய்களை உகாவித்து குணப்படுத்தும்

