நான் ஒர் பூஜ்யமே

விலக்குற்ற விதி
அறிவாயோ..!
மதிப்பற்ற சூன்யத்தின்
மையம் தேடுவாயடி...
எதுவுமற்று போகலாம்
எல்லாவும் ஆகலாம்
இடுவது உன்
விருப்பம்...
ஒன்று நீயெனில்
பூஜ்யமாய் இருக்கிறேன்
ஒன்றிர்க்கு முன்
ஒன்றுமேயில்லை
பிணைந்து வந்தால்
இலக்கமேயில்லை
அறிவாயோ...?
எல்லைகள் அற்றும்
எல்லைக்குள்ளும்
நீ அற்றும்
உனக்குள்ளும்
நிற்க்கும்....
நான் ஓர் பூஜ்யமே!

எழுதியவர் : சுரேஷ் குமார் (9-Jul-18, 11:23 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 70

மேலே