கார்த்திக் பழனிச்சாமி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கார்த்திக் பழனிச்சாமி |
இடம் | : கோவை, தாராபுரம், சென்னை |
பிறந்த தேதி | : 30-Aug-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 935 |
புள்ளி | : 117 |
நான் கனவுகளை
காதலியாக ஏற்றுக் கொண்டவன்...
கவிதைகளை
என் உலகமாக்கி வாழ்ந்து கொள்பவன்...
எல்லா விளக்கையும்
ஏற்றிவிட்டு இருட்டில் நடப்பவன்...
உடையாத இதயத்தில்
உடைந்த காதலை சேமிப்பவன்...
ஆயிரம் துணை இருந்தாலும்
தனிமையை துணையாக ஏற்றவன்...
புரிந்த புதிரில் கூட
புரியாதவனாய் வாழப் பழகியவன்...
நிழல்களை நேசிப்பவன்
.... கார்த்திக் ....
ஜன்னலோர பயணங்களில்
சிறுவனாக மாறிவிடும் மனசு...
வேடிக்கை பார்க்கிறது
நகரும் நாடகத்தை...
கணிப்பொறி இடைநிலை
நினைவகத்தைப் போல..
பயன்பாடுகள் முடிந்த பின்னர்
அழிக்கப்படுகின்றேன் நான்...
எப்போதும் நிரந்திரமில்லா
உறவுகளை நேசிக்காதீர்கள்..
இறுதியில் வலிகளை மட்டுமே
விட்டு செல்வார்கள்...
எப்போதும்
என்னைப்போல் நடித்துக்காட்டி
என் ஆண்மையின் திமிரை ...
சிறு வெட்கப் புள்ளிகளில்
அடைத்துக்கொள்கிறாள் அவள்.
மழைக் காலத்திற்குள்
மயங்கி விட்ட மனது...
மழைப் பயணத்தை
எனக்குள் பதிவேற்றியது...
சாவி கொடுத்ததும்
சட்டென தொடங்கியது
சாரல் மழையும்தான்...
என் பயணத்திற்கு
உயிர் கொடுத்து...
உருமிக் கொண்டது
என் புதுக்கவிதை...
பரபரப்பான சாலைகளில்
பரபரப்பாக பெய்த மழையால்
நெரிசல் தான் கொஞ்சம்
என் உணர்வுகளுக்குள்...
நெடுஞ்சாலையில் இடைவெளி
கொடுத்த மழையால்
வேகம் அதிகரித்தே
மணித்துளிகளை விழங்கிக் கொண்டது...
தேநீர் நிறுத்தமொன்றில்
தேடி வந்துவிட்ட மழை...
என்னை தொடமுடியாமல்
முறைத்தே பார்த்ததே கடந்து சென்றது..
என்றும் கடக்கும் பாதைகளை
இன்று கவிதையாக்கியது மழைதான்...
மீண்டுமொரு வசந்த காலப் பயணமென்று
இரவுகள் விடிந்த பின்பும்
இருள் பயம் மனதிற்குள்...!
இதயதுடிப்புகள் நிற்கும் முன்..
இன்னொரு முறை உன்னை காதலிக்கவா.....
செவ்வாய் நோக்கிய பயணத்திற்கு
செவ்’வாய்’ கொண்ட
அழகிகள் தேவை
என்ற விளம்பரத்தை
’ப்ச்’ கொட்டாமல் ரசித்து
வேகமாகச் சுற்றியது பூமி.
சகுனத்தடை ஏதுமின்றி
சிலநொடி
இளைப்பாற நின்றது
உலகின் ஒரு ஓரத்தில்.
சாக்கடையில்
விழுந்தவனைச் சுற்றி
எதற்கும் ஆகாத
செல்ஃபி பேய்கள்
கையை உயர்த்தியபடி நிற்க...
மிச்சமான எச்சில் சோற்றை
இல்லாதவனுக்கு
கொடுக்க மறுத்த
முடி(வி)யில்லா முதலாளிகள்
கும்மாளமாய்க் கூத்தடித்துச் சிரிக்க...
பெற்றெடுத்த வயிற்றில்
பெட்ரோல் ஊற்றுவது போல
முதியோர் இல்லம் சேர்த்துவிட்டு
முண்டங்களாய்
பிள்ளைகள் மாறியிருக்க...
பஸ்ஸில் அலையும் ஆண்கள் சிலர்
உரசித் தேய்க்கு
பட்டாம்பூச்சிகள் 3
"""""""""""""""'''''''''''"""""'"""""
பொங்கல் வாழ்த்துதான்
உனக்கு பொருந்தும்
நீ
கரும்பென்பதால்.!
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
சுந்தரப்பாதம் கொண்டு
கடலைத் தீண்டுகிறாய்
சும்மா இருந்த கடல்
சூடாகிப்போனது
சுனாமியாய்.!
"""""""""""""""""""""""""""""""""""""""""
பெருவிரலால்
பெண்போடும் கோலத்தில்
பேரின்பம்
காண்கிறது பூமி.!
"""""""""""""""""""""""""""""""""""""""""""
நிலா மேகத்திற்குள்
மறையும் போதெல்லாம்
நீ ஆடைமாற்றும்
நியாபகம் வந்துவிடுகிறது.
"""""""""""""""""""""""""""""""""""""""""""
பயணிக்கும் கண்களை
விபத்துக்குள்ளாக்கும்
பல வளைவுகள்கொண
நிலவை ரசித்து விட்டு...
அவள் நிழலை மிதித்ததிற்கு ...
அழுபவன் நான்...