வசந்த காலா பயணம்

மழைக் காலத்திற்குள்
மயங்கி விட்ட மனது...
மழைப் பயணத்தை
எனக்குள் பதிவேற்றியது...
சாவி கொடுத்ததும்
சட்டென தொடங்கியது
சாரல் மழையும்தான்...
என் பயணத்திற்கு
உயிர் கொடுத்து...
உருமிக் கொண்டது
என் புதுக்கவிதை...
பரபரப்பான சாலைகளில்
பரபரப்பாக பெய்த மழையால்
நெரிசல் தான் கொஞ்சம்
என் உணர்வுகளுக்குள்...
நெடுஞ்சாலையில் இடைவெளி
கொடுத்த மழையால்
வேகம் அதிகரித்தே
மணித்துளிகளை விழங்கிக் கொண்டது...
தேநீர் நிறுத்தமொன்றில்
தேடி வந்துவிட்ட மழை...
என்னை தொடமுடியாமல்
முறைத்தே பார்த்ததே கடந்து சென்றது..
என்றும் கடக்கும் பாதைகளை
இன்று கவிதையாக்கியது மழைதான்...
மீண்டுமொரு வசந்த காலப் பயணமென்று
குறித்துக் கொள்கிறது
என் குறிப்பேடுகள்....

எழுதியவர் : கார்த்திக் பழனிச்சாமி (16-Oct-21, 11:05 pm)
பார்வை : 2455

மேலே