தங்கைக்கொரு பிறந்தநாள் வாழ்த்து

அன்புடன் ஒரு வாழ்த்து மடல்..

பங்குனியில் துளிர்த்த
கத்திகை மொட்டே..

கவிதைக்கும் மூன்றெழுத்து
அன்புக்கும் மூன்றெழுத்து
உனக்கும் மூன்றெழுத்துதான்...

கார்மேகமாய் உவகை பொழியும்
கதம்பமே..
அரசியாய் உன் உலகிலும்
மழலையாய் எங்கள் உலகிலும்
நிறைந்தவளே...

ஆறு காலமும் பாட்டு எழுதி..
ஐந்து நிலமும் தோரணம் கட்டி..
நால் வகை சொல்லும் பூ வீச..
மூன்று உலகும் மெட்டு பாட..
சூரியன் சந்திரன் இருவரும் வரவேற்க..
பிறந்தநாள் காணும் ஒரு மலரே..
என்றும் ஆனந்தம் நிறைந்திருக்க
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

எழுதியவர் : கார்த்திக் பழனிச்சாமி (16-Oct-21, 10:46 pm)
பார்வை : 3326

மேலே