வள்ளிமரம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வாதசந்நி தோஷமறு மாறாத் தழலுளதென்(று)
ஓதுவரிவ் வன்னிக்(கு) உவமையுண்டோ - பூதலத்திற்
கானார் விஷமுங் கபமுஞ் சொறியும்போந்
தேனே யிதையறிந்து செப்பு
- பதார்த்த குண சிந்தாமணி
வள்ளிமரத்துக்கு வாதசன்னி, முத்தோடம், விடம், சிலேட்டுமம், சொறி இவை நீங்கும்